தொழில் தொடங்க ஆசை இருக்கிறது — ஆனால் எந்தக் கடன் திட்டம்? இந்தக் கேள்விக்கு எளிய வழிகாட்டி இதோ. (திட்ட விதிகள் மாறக்கூடும் — விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்க்கவும்.)
1. சிறிய தொடக்கம் (கடை, தையல், உணவுத் தொழில்)
முத்ரா கடன் — பிணையில்லாக் கடன்; ஷிஷு, கிஷோர், தருண், தருண் பிளஸ் பிரிவுகள். விவரம்: முத்ரா.
2. புதிய உற்பத்தி / சேவை அலகு
PMEGP — திட்ட மதிப்பில் மானியம்; பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு அதிக மானியம். PMEGP விவரம்.
3. படித்த முதல் தலைமுறைத் தொழில்முனைவோர்
NEEDS (தமிழக அரசு) — மூலதன மானியம் + வட்டி மானியம்; பெண்களுக்கு வயது வரம்பில் தளர்வு. NEEDS விவரம்.
4. பயிற்சி & வழிகாட்டல் — TWEES
2026 மார்ச்சில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES), ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்கள் தொழில் தொடங்க பயிற்சி, வளங்கள், வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
5. பெரிய விரிவாக்கம் — ‘வெற்றி மகளிர்’ திட்டம்
2026 செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டம்: TIIC மூலம் ₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை, ஆண்டுக்கு 9.95% வட்டி, 9 ஆண்டுகள் வரை. முழுச் செய்தி.
எங்கிருந்து தொடங்குவது?
- எங்கள் 1 நிமிடத் தகுதி சரிபார்ப்பை பயன்படுத்துங்கள்
- Udyam பதிவு செய்யுங்கள் (இலவசம்)
- திட்ட அறிக்கை தயாரிக்க சுதேசி உதவி மையம் / வழிகாட்டிகள் உதவுவர்

