சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
தமிழ்நாடு
🪔 தீபாவளிசுதேசி தீபாவளி 2026 உள்ளூர் பொருட்களை வாங்குவோம் — உள்ளூர் குடும்பங்களை வாழவைப்போம்!00நாள்00மணி00நிமி00வி
மகளிர் தொழில்முனைவோர் & சிறு வணிகர்களுக்கு

MSME கடன் திட்டங்கள் — மத்திய & தமிழக அரசு

பிணையில்லா கடன்கள், மானியங்கள், வட்டி சலுகைகள் — உங்களுக்குப் பொருந்தும் திட்டத்தை ஒரே நிமிடத்தில் கண்டறியுங்கள்.

📌 சுருக்கமாக

மத்திய அரசின் முத்ரா (₹20 லட்சம் வரை), PMEGP (உற்பத்தி ₹50 லட்சம் / சேவை ₹20 லட்சம், பெண்களுக்கு 25–35% மானியம்), CGTMSE (பிணையில்லா கடன் உத்தரவாதம்) மற்றும் தமிழக அரசின் NEEDS, UYEGP, AABCS திட்டங்கள் — தகுதி, கடன் வரம்பு, மானியம், விண்ணப்ப இணைப்புகள் ஒரே பக்கத்தில்.

🎯 தகுதி சரிபார்ப்பு டூல்

எந்தத் திட்டம் உங்களுக்குப் பொருந்தும்?

உங்கள் கல்வித் தகுதி, பாலினம், வயது மற்றும் முதலீட்டுத் தொகையை உள்ளிடுங்கள் — மத்திய / மாநில அரசுத் திட்டங்களில் பொருந்துபவற்றை உடனே காட்டும்.

இது ஒரு வழிகாட்டிக் கருவி மட்டுமே. இறுதித் தகுதியை வங்கி / மாவட்ட தொழில் மையம் (DIC) தீர்மானிக்கும். விதிமுறைகள் மாறக்கூடும் — அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்க்கவும்.

👈 உங்கள் விவரங்களை உள்ளிட்டு பொத்தானை அழுத்தவும் — மத்திய / மாநில அரசுத் திட்டங்களில் எது உங்களுக்குப் பொருந்தும் என்று உடனே பார்க்கலாம்.
Central Government MSME Schemes

மத்திய அரசு MSME கடன் திட்டங்கள்

தேசிய அளவிலான மூலதனம் மற்றும் பிணையில்லா நிதியுதவிகள்.

1🇮🇳 மத்திய அரசு

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன்) (PMMY)

நோக்கம்: சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் மகளிர் தொழில்முனைவோருக்குப் பிணையில்லா நிதியுதவி (Collateral-Free Loan) வழங்குதல்.

💰 கடன் வரம்பு
சிஷு (Shishu): ₹50,000 வரை — தொழில் தொடங்க
கிஷோர் (Kishore): ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை — தொழிலை விரிவுபடுத்த
தருண் (Tarun): ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை — பெரிய அளவிலான விரிவாக்கம்
தருண் பிளஸ் (Tarun Plus): ₹10 – ₹20 லட்சம் — தருண் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு (அக்டோபர் 2024 முதல்)
🎁 மானியம்
நேரடி மானியம் இல்லை — சொத்துப் பிணையம் இல்லாத கடன், குறைந்த ஆவணங்கள்.
✅ தகுதி
விவசாயம் சாராத உற்பத்தி, சேவை, வியாபாரத் தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்
18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள்
மகளிர் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை
2🇮🇳 மத்திய அரசு

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)

நோக்கம்: புதிய சுயதொழில் திட்டங்கள் மற்றும் உற்பத்தி / சேவை சார்ந்த நிறுவனங்களை அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

💰 கடன் வரம்பு
உற்பத்தித் துறை (Manufacturing): அதிகபட்சம் ₹50 லட்சம் வரை
சேவைத் துறை (Business / Service): அதிகபட்சம் ₹20 லட்சம் வரை
🎁 மானியம்
பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு: நகர்ப்புறம் 25%, கிராமப்புறம் 35% மானியம்
பொதுப் பிரிவு: நகர்ப்புறம் 15%, கிராமப்புறம் 25%
சொந்தப் பங்களிப்பு: பொது 10%, சிறப்புப் பிரிவு 5%
✅ தகுதி
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்; வருமான வரம்பு இல்லை
உற்பத்தியில் ₹10 லட்சம், சேவையில் ₹5 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு குறைந்தது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
புதிய தொழில்களுக்கு மட்டும்
3🇮🇳 மத்திய அரசு

சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியம் (CGTMSE) (CGTMSE)

நோக்கம்: எந்தவித சொத்துப் பிணையமும் (Collateral) இல்லாமல் வங்கிகள் மூலம் பெரிய தொகையைக் கடனாகப் பெற மத்திய அரசு வழங்கும் கடன் உத்தரவாதத் திட்டம்.

💰 கடன் வரம்பு
புதிய மற்றும் தற்போதைய MSME நிறுவனங்களுக்கு ₹10 கோடி வரை கடன் உத்தரவாதம் (ஏப்ரல் 2025 முதல்; முன்பு ₹5 கோடி)
🎁 மானியம்
மகளிர் தொழில்முனைவோருக்கு முன்னுரிமையும், உத்தரவாதக் கட்டணத்தில் (Guarantee Fee) சலுகைகளும் உண்டு.
✅ தகுதி
உற்பத்தி, சேவை மற்றும் சில்லறை வியாபார MSME-கள்
வங்கி / தகுதியுள்ள நிதி நிறுவனம் வழியாக விண்ணப்பம்
சொத்துப் பிணையம் / மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவையில்லை
Tamil Nadu Special Subsidy Schemes

தமிழ்நாடு மாநில அரசு MSME கடன் திட்டங்கள்

தமிழக மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு மானியக் கடன் திட்டங்கள்.

1🏛️ தமிழ்நாடு அரசு

நீட்ஸ் திட்டம் — புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)

நோக்கம்: படித்த இளம் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் புதிய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களைத் தொடங்க தமிழக அரசு வழங்கும் முதன்மைத் திட்டம்.

💰 கடன் வரம்பு
திட்ட மதிப்பு ₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை
🎁 மானியம்
திட்ட மதிப்பில் 25% மூலதன மானியம் (அதிகபட்சம் ₹75 லட்சம்)
3% வட்டி மானியம்
சொந்தப் பங்களிப்பு: பொது 10%, சிறப்புப் பிரிவு 5%
✅ தகுதி
முதல் தலைமுறை தொழில்முனைவோர்
கல்வி: பிளஸ் 2 / பட்டம் / டிப்ளமோ / ITI / தொழிற்பயிற்சி
வயது: பொதுப் பிரிவு 21–35; பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 வரை தளர்வு
2🏛️ தமிழ்நாடு அரசு

வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (UYEGP) (UYEGP)

நோக்கம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களின் உள்ளூர் பகுதியிலேயே சுயதொழில் தொடங்க நிதியுதவி அளித்தல்.

💰 கடன் வரம்பு
உற்பத்தி / சேவை / வியாபாரம் — திட்ட மதிப்பு அதிகபட்சம் ₹15 லட்சம் வரை
🎁 மானியம்
திட்ட மதிப்பில் 25% அரசு மானியம் (அதிகபட்சம் ₹3.75 லட்சம்)
சொந்தப் பங்களிப்பு: பொது 10%, சிறப்புப் பிரிவு 5%
✅ தகுதி
குறைந்தது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: பொது 18–35; பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு 45 வரை
குடும்ப ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு மிகாமல்
3🏛️ தமிழ்நாடு அரசு

அண்ணல் அம்பேத்கர் வணிகச் சாம்பியன் திட்டம் (AABCS)

நோக்கம்: சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த (SC/ST) தொழில்முனைவோர் மற்றும் மகளிரை ஊக்குவிப்பதற்கான சிறப்புத் திட்டம்.

💰 கடன் வரம்பு
புதிய தொழில் தொடங்க அல்லது இருக்கும் தொழிலை மேம்படுத்த தேவையான மூலதனத்திற்குக் கடனுதவி
🎁 மானியம்
திட்ட மதிப்பில் 35% மூலதன மானியம்
6% வட்டி மானியம் (Interest Subvention)
✅ தகுதி
SC / ST தொழில்முனைவோர்
வயது 18 – 55
கல்வித் தகுதி தேவையில்லை
⬇️ Download Corner

பதிவிறக்கப் பகுதி

திட்டங்களின் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவங்கள், அரசாணைகள் மற்றும் மாவட்ட தொழில் மையங்களின் (DIC) முகவரிகள்.

LINK NEEDS / UYEGP / AABCS — MSME Online விண்ணப்பத் தளம் (தமிழ்நாடு)தமிழக அரசின் சுயதொழில் கடன் திட்டங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம். விண்ணப்பப் படிவங்கள் · 1 பதிவிறக்கம் ⬇ LINK UYEGP ஆன்லைன் விண்ணப்பம்வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம். விண்ணப்பப் படிவங்கள் · 1 பதிவிறக்கம் ⬇ PDF AABCS அரசாணை (G.O.) — PDFஅண்ணல் அம்பேத்கர் வணிகச் சாம்பியன் திட்ட அரசாணை. அரசாணைகள் & வழிகாட்டிகள் · 2 பதிவிறக்கம் ⬇ LINK PMEGP விண்ணப்பம் — KVIC e-Portalபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட ஆன்லைன் விண்ணப்பம். விண்ணப்பப் படிவங்கள் · 1 பதிவிறக்கம் ⬇ LINK முத்ரா கடன் விண்ணப்பம் — Jan Samarthஅரசுக் கடன் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த தளம். விண்ணப்பப் படிவங்கள் · 1 பதிவிறக்கம் ⬇ LINK Udyam MSME பதிவு (இலவசம்)ஆதார் மூலம் இலவச MSME பதிவு. விண்ணப்பப் படிவங்கள் · 1 பதிவிறக்கம் ⬇ PDF சுதேசி–alternativeபொருட்கள் பட்டியல் (தேசிய கையேடு)அன்றாட வாழ்வில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இந்திய மாற்றுகள். கையேடுகள் · 1 பதிவிறக்கம் ⬇
அதிகாரப்பூர்வ இணைப்புகள்

நேரடியாக விண்ணப்பிக்க

🪪

Udyam பதிவு

MSME பதிவு — இலவசம், ஆதார் மூலம்.

udyamregistration.gov.in ↗
🏦

Jan Samarth

முத்ரா உட்பட அரசுக் கடன்களுக்கு ஒரே தளம்.

jansamarth.in ↗
🏭

PMEGP e-Portal

KVIC வழியாக PMEGP விண்ணப்பம்.

kviconline.gov.in ↗
🏛️

MSME Online (TN)

NEEDS, UYEGP, AABCS விண்ணப்பம்.

msmeonline.tn.gov.in ↗
கேள்வி பதில்

MSME கடன் — அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சொத்துப் பிணையம் (Collateral) இல்லாமல் கடன் பெற முடியுமா?
ஆம். முத்ரா கடன்கள் பிணையில்லாதவை. மேலும் CGTMSE உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வங்கிகள் சொத்துப் பிணையம் இன்றி பெரிய தொகையைக் கடனாக வழங்குகின்றன.
முத்ரா கடனின் மூன்று பிரிவுகள் என்ன?
சிஷு — ₹50,000 வரை; கிஷோர் — ₹50,000 முதல் ₹5 லட்சம்; தருண் — ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம். தருண் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு “தருண் பிளஸ்” பிரிவில் ₹20 லட்சம் வரை கிடைக்கும்.
PMEGP-இல் பெண்களுக்கு எவ்வளவு மானியம்?
சிறப்புப் பிரிவினருக்கு (பெண்கள் உட்பட) நகர்ப்புறத்தில் 25% மற்றும் கிராமப்புறத்தில் 35% வரை திட்ட மதிப்பில் மானியம் வழங்கப்படுகிறது.
NEEDS திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள்?
பிளஸ் 2 / பட்டம் / டிப்ளமோ / தொழிற்பயிற்சி பெற்ற முதல் தலைமுறை தொழில்முனைவோர். பொதுப் பிரிவுக்கு 21–35 வயது; பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க உதவி எங்கே கிடைக்கும்?
உங்கள் மாவட்ட தொழில் மையம் (DIC) அல்லது எங்கள் சுதேசி உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் — விண்ணப்பம் முதல் வங்கி வரை வழிகாட்டுவோம்.

விண்ணப்பிக்க உதவி வேண்டுமா?

சுதேசி உதவி மையம் உங்கள் மாவட்டத்தில் திட்டத் தேர்வு, ஆவணங்கள், வங்கி இணைப்பு வரை வழிகாட்டும் — முற்றிலும் இலவசம்.

WhatsApp-ல் பகிர்
சுதேசி இயக்கத்தில் இணையுங்கள்
இணைகஉறுதிமொழி