சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உயர்ந்திருக்கும் இன்றைய சந்தையில், மரச்செக்கு எண்ணெய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. ஆனால் பல பாரம்பரியத் தயாரிப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள்.
பிராண்டாக மாற்றும் மூன்று படிகள்
- கதைசொல்லல்: தயாரிப்பு முறை, பாரம்பரியம், தூய்மையை மக்களிடம் கொண்டு சேர்த்தல்
- பேக்கேஜிங்: கண்ணாடி பாட்டில், தெளிவான லேபிள், தயாரிப்பு தேதி
- விலை நிர்ணயம்: தரத்தை பிரதிபலிக்கும் நியாயமான பிரீமியம் விலை
மொத்த விற்பனையை மட்டுமே நம்பாமல், டிஜிட்டல் தளங்கள் மற்றும் சுதேசி மேளாக்கள் மூலம் நேரடி நுகர்வோரை அடையலாம்.
மண்ணின் வளத்தைக் காக்கும் மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை ஊக்குவித்தல் எங்கள் கொள்கை.— SJM தமிழ்நாடு

