"படித்து முடித்ததும் ஒரு நல்ல வேலை" — இது தலைமுறைகளாக நமது இளைஞர்களுக்குச் சொல்லப்பட்ட கனவு. ஆனால் உண்மையான பொருளாதார எழுச்சி, வேலை வழங்குபவர்களை உருவாக்குவதில் இருக்கிறது.

களக் கதை: மதுரை

சுதேசி ஃபெலோஷிப்பில் இணைந்த ஒரு பொறியியல் மாணவர், தனது 6 மாத களப்பணியின் போது உள்ளூர் கைத்தறி நெசவாளர்களின் சிக்கலைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கான ஒரு நேரடி விற்பனைத் தளத்தை உருவாக்கினார். இன்று அது 30 குடும்பங்களுக்கு வருமானம் தருகிறது.

  • கள யதார்த்தத்தை நேரடியாகக் கற்றல்
  • சிக்கலைத் தீர்வாக மாற்றும் சிந்தனை
  • சான்றிதழ் + சிறந்த திட்டங்களுக்கு நிதி ஆதரவு
வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை வழங்குபவர்களாக மாறுங்கள்!— SJM இளைஞர் சக்தி