தமிழ்நாட்டில் சுதேசி சிந்தனைகளையும், உள்நாட்டுத் தொழில்முனைவோரையும், கிராமப்புறக் கைவினைக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் தொடர்ச்சியாகப் பல்வேறு சுதேசி நிகழ்வுகள் மற்றும் மேளாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் தமிழகத்தின் தொழில் நகரமான கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள முதன்மை நிகழ்வு “கோவை சுதேசி மேளா 2026”.

சிறப்பம்சங்கள்

50,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படும் இந்த மாபெரும் விழாவில், MSME மற்றும் பாதுகாப்புத் துறைக்கான பிரத்யேக அமர்வுகள், விவசாயப் புதுமைகள், மகளிர் தொழில்முனைவோர் நெட்வொர்க் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்புகளின் மாபெரும் கண்காட்சி (Swadeshi Showcase) ஆகியவை இடம்பெறுகின்றன.

சுதேசி விருதுகள்

சாதனை படைத்த சிறந்த 20 MSME நிறுவனங்கள், 20 முன்னோடிப் பெண்கள், 20 சிறந்த விவசாயிகள் மற்றும் 20 இளம் சாதனையாளர்களுக்கு “சுதேசி விருதுகள்” வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.